Quantcast
Channel: தமிழ் செய்திகள் | News in Tamil | Online News Tamil | Tamil Nadu Latest News | Samayam Tamil

ஓட்டு போடாதங்களுக்கு விடுமுறை கேன்சல்? அரசு அதிகாரி அறிவிப்பால் வந்த சிக்கல்!

$
0
0
அளித்தும் வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு அவர்களது விடுப்பில் கழிக்கப்படும் என்று முதன்மைச் செயலாளர் அமுதா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தினர் இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், “தமிழ்நாடு அரசு உள்துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி. பெ. அமுதா அவர்கள் 18.04.2024 அன்று வெளியிட்டுள்ள அலுவலக ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் 19.04.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு 19.04.2024 அன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது என தெரிவித்துள்ளார்.உள் மற்றும் மதுவிலக்கு (ம) ஆயத் தீர்வைத் துறை பணியாளர்கள் அனைவரும் தவறாது தங்களது வாக்கினை 19.04.2024 அன்று செலுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், துறையின் இரண்டாம் நிலை அலுவலர்கள், தங்களுக்கு கீழ் பணியாற்றும் பணியாளர்கள் தங்களது வாக்கினை முறையாகப் பதிவிட்டுள்ளார்களா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என ஆணையிட்டுள்ளார்கள். இல்லையென்றால், அதாவது தங்களது வாக்கினை செலுத்தாதப் பணியாளர்களின் விவரங்களை, அப்பணியாளர்களின் விடுப்புக் கணக்கிலிருந்து தற்செயல் / ஈட்டிய விடுப்பினை கழிப்பதற்கு ஏதுவாக, அலுவலக நடைமுறைப் பிரிவிற்கு அனுப்பி வைக்குமாறு ஆணையிட்டுள்ளார்.இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள பொது விடுமுறைக்கு எதிராக, வாக்களிக்காத பணியாளர்களுக்கு 19.04.2024 அன்று வழங்கப்பட்ட பொது விடுமுறையினை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.அரசு முதன்மைச் செயலாளர், உள் துறை அவர்களின் இந்த அலுவலக ஆணையானது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானதாகும். அரசின் முதன்மைச் செயலாளராக இருக்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலரின் இந்த அலுவலக ஆணையானது இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானதாகும். இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிநபர் அடிப்படைச் சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும். தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையே வாக்களிக்க யாராலும் கட்டாயப்படுத்தவோ நிர்பந்தப்படுத்தவோ முடியாது என்ற சூழ்நிலையில், தனது கீழ் பணியாற்றும் அரசு பணியாளர்களை, தான் வகிக்கும் அரசு முதன்மைச் செயலாளர் என்ற பதவியினை வைத்து எதேச்சதிகார தொணியில், அதுவும் வாக்களிக்கத் தவறினால் அதற்காக வழங்கப்பட்ட அரசு பொது விடுமுறையினை அனுமதிக்க இயலாது - விடுப்புக் கணக்கில் கழிக்கப்படும் என ஆணையிடுவது என்பது அதிகார துஷ்பிரயோகமான செயல்.தேர்தலில் வாக்கினைச் செலுத்துவதற்கு அரசுப் பணியில் எந்தவொரு உயர் நிலையில் இருந்தாலும் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் பணியாளர்களை, யாரும் யாருக்கும் ஆணையிடவும் கட்டாயப்படுத்தவும் முடியாது. அதோடு மட்டுமல்லாமல், தேர்தல் வாக்கு செலுத்த விருப்பமில்லை என பதிவிடுவதற்கு 49-0 என இந்திய தேர்தல் ஆணையமே வாக்காளர்களுக்கு உரிமையினை வழங்கியிருக்கிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு இந்திய குடிமகனுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான, வாக்களிப்பதையும் யாருக்கு வாக்களித்தோம் என்பதையும் வாக்கு அளித்தோமா-இல்லையா என்பதையும் எந்த அதிகார ஆணையினாலும் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது. உள் துறை அரசு முதன்மைச் செயலாளரின் இந்த அலுவலக ஆணையினால் பணியாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆட்பட்டு உள்ளனர்.தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தினைப் பொறுத்தவரையில் 100 விழுக்காடு வாக்களிப்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், அதனை ஒரு அதிகார ஆணையினால் செயல்படுத்த நினைப்பதையும் அதிகார வரம்பிற்கு மீறி செயல்படுத்த முயல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.வாக்காளர்களைப் பொறுத்தவரையில், அரசுப் பணியில் இருந்தாலும், அவர்களை இந்திய நாட்டின் குடிமகனாகத்தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு பணியாளர்களும் தங்களது கடமையினை நினைவில் கொண்டு, இதுநாள்வரை ஜனநாயகக் கடமையான வாக்குப் பதிவினை செலுத்தி வருகின்றனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக, உள்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள அலுவலக ஆணையினை உடனடியாக இரத்து செய்யுமாறும் அவர்மீது தக்க நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும், உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத் துறைப் பணியாளர்கள் அச்சமின்றி தங்களது வாக்குப் பதிவினைசெலுத்துவதை உறுதி செய்யுமாறும் இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிநபர் அடிப்படைச் சுதந்திரத்தினை காத்திடவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி; அமைச்சர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு!

$
0
0
ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது, இதில் முதல் கட்டமாக தமிழக முற்பட பல மாநிலங்களில் இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு பதிவு நடைபெறுகிறது. குடும்பத்துடன் சென்று வாக்கு பதிவு இதில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநாடு கண்டபத்து கிராமத்தில் தமிழக மின்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். வெற்றி பெறுவார் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில் இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கருணாநிதி வெற்றி பெறுவார் என்றும் மத்தியில் இந்தியா கூட்டணியை ஆட்சி அமைக்கும் என்றார்.

மதுரையில் பரபரப்பு! 5 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.. ஒரு வாக்கு கூட பதிவாகாத அவல நிலை! காரணம் என்ன?

$
0
0
மதுரையில் பரபரப்பு: மாவட்டம் திருமங்கலத்தையடுத்த கள்ளிக்குடி - காரியாபட்டி சாலையில் உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்த ஆலையில் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிகளை சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 5 கிராம மக்கள் : இந்த உர தொழிற்சாலையால் கே.சென்னம்பட்டி, உன்னிப்பட்டி, ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும், இந்த ஆலையால் 5 கிராமங்களில் மண்வளம், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த பகுதி வறண்ட பூமியாக மாறிவிடும்.காரணம் என்ன?எனவே சம்பந்தப்பட்ட உரஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே மனு அளித்திருந்த நிலையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று வட்டாட்சியர் செந்தாமரையிடம் உரத் தொழிற்சாலை மூடநடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக நேற்று வட்டாட்சியரிடம் ஐந்து கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.இந்த நிலையில் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்த ஐந்து கிராம மக்களும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த நிலையில் இதனால் 5 கிராமங்களில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி கிடக்கிறது. ஏற்கனவே தகவல் அறிந்த திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, வட்டாட்சியர் செந்தாமரை, திருமங்கலம் டிஎஸ்பி தலைமையில் முதற்கட்டமாக கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.ஒரு வாக்கு கூட பதிவாகாத அவல நிலை:அதிகாரிகளின் பேச்சுக்கு செவிசாய்க்காத நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பிக்கும் வரை வாக்களிக்கப் போவதில்லை என தெரிவித்தனர்.தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்தும், தற்போது 8 மணி நேரத்தை கடந்தும் ஐந்து ஊரைச் சேர்ந்த கிராம மக்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர்; தங்கம் தென்னரசு குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வாக்களித்தார்!

$
0
0
குடும்பத்தினருடன் வாக்கு பதிவு நாடாளுமன்ற தேர்தல் காலை 7:00 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் மாவட்டம் மல்லாங்கிணர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது, தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியும் மணிமேகலை அவரது மகள்கள் என குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். தெளிவான முடிவை எடுக்கும் மக்கள் தங்கம் தென்னரசின் இளைய மகள் இமையா அமெரிக்காவில் படித்து வரும் நிலையில் முதல்முறையாகவாக்களிக்க வந்த குறிப்பிடத்தக்கது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் நாட்டு மக்கள் மிகவும் தெளிவாக ஒரு முடிவை வழங்குவதற்காக காத்துக் கொண்டுள்ளனர். ஒன்றியத்தில் மாற்றம் ஏற்படும் மத்தியில் ஆட்சி மாற்றம் உருவாவது அவசியம் தேவைகளாக மக்கள் உணர்ந்துள்ளனர். தமிழக முதலமைச்சர் நல்லாட்சிக்கு சான்றிதழ் வழங்கும் விதமாக ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் விதமாகவும் மக்கள் காலை முதல் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றார்கள்.

வெப்ப அலை வீசும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையம் சொன்ன ஹீட் மெசேஜ்!

$
0
0
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் ஏப்ரல் 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஏப்ரல் 19) தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நாளை (ஏப்ரல் 20) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 21 முதல் 23 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.ஏப்ரல் 24, 25 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. நாளை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகையில் வாக்குப்பதிவு: நீண்ட வரிசையில் காத்திருப்பு... பட்டினி கிடப்பதாக வாக்காளர்கள் வேதனை

$
0
0
இந்தியாவின் 18 வது மக்களவைத் ஏழு கட்டமாக நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் கட்ட தமிழகத்தில் தொடங்கியுள்ளது. அதன்படி நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. எண்ணிக்கை பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 13,38,459, ஆண் வாக்காளர்கள்: 6,54,850, பெண் வாக்காளர்கள்: 6,83,528, மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 81 உள்ளடக்கியுள்ளது. வாக்கு பதிவு இன்று காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் இன்று வாக்களித்தனர். நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் 5 மணி வரை 65.06% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஊராட்சியில் வாக்குப்பதிவு மந்தம்ஆதமங்கலம் ஊராட்சியில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க நீண்ட. வரிசையில் வெகு நேரம் காத்திருந்தனர்.நீண்ட வரிசையில் காத்திருப்பு ஆதமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி நிலைய எண் 147 ல் வாக்குப்பதிவு மிகவும் தாமதமாக நடைபெற்றது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்தனர்.வாக்காளர்கள் வேதனை மதிய உணவு கூட அருந்தாமல் வாக்களிக்க வந்து பட்டினியாக கிடப்பதாக வாக்காளர்கள் வேதனை தெரிவித்தனர். வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக வாக்காளர்கள் குற்றச்சாட்டு கூறினர்.

FACT CHECK : முஸ்லீம்கள் ஓட்டு பறிக்கப்படும் என அசாம் பாஜக முதல்வர் கூறினாரா? - வைரலாகும் செய்தி

$
0
0
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப் பதிவு 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்று முடிந்தது. ஏழு கட்டங்களாக நடக்கவுள்ள தேர்தலுக்காக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. பரவும் செய்திஅண்மையில் 'தைனிக் யுகஷங்க்' என்ற நாளேட்டில் வெளியான செய்தி என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. ஹிமந்த பிஸ்வா சர்மாவின் படத்துடன் கூடிய அந்த செய்தியில், “பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் வாக்குரிமை பறிக்கப்படும்” என அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த பேப்பர் கட்டிங் புகைப்படத்தை பகிர்ந்த ஒரு பேஸ்புக் பயனர், “அஸ்ஸாம் முதல்வரின் அறிவிப்பு கொடூரமான டார்கெட்” என்று விமர்சனம் செய்திருந்தார். மேலும் பலரும் இதனை பகிர்ந்து பாஜகவுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தனர்.சரிபார்ப்பு முறை வைரலான செய்தியை உன்னிப்பாக கவனித்தபோது, தைனிக் யுகஷங்க் நாளேட்டில் 2016ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி அந்த செய்தி வெளியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில், இதுதொடர்பான பதிவு எப்போது முதன்முறையாக பகிரப்பட்டது என்பதை கண்டறிய முயற்சி செய்தோம். அன்றைய தினம் வெளியான தைனிக் யுகஷங்க் நாளேட்டின் பதிப்பு நமக்கு கிடைக்கவில்லை.இதனால் வருடம், தேதி உள்பட பல கீவேர்டுகளை போட்டு சர்ச் செய்தோம். அதன் முடிவில் மார்ச் 11, 2016 அன்று, ராய்ட்டர்ஸில் வெளியான ஒரு செய்தியைக் கண்டோம். அது, 2016ம் ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலின் போது பாஜகவின் பிரச்சாரக் குழு பொறுப்பில் இருந்த , ராய்ட்டர்ஸ் செய்தி தளத்துக்கு அளித்த பேட்டியாகும். அதில் ஹிமந்தா, “1951ல் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெற்ற 1971ம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்களை வாக்களிப்பதில் இருந்து தடுப்போம். அவர்கள் இந்தியாவில் தங்கலாம்.. ஆனால் மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். உறுதி செய்யப்பட்டதுஇதன்மூலம் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா எந்த கருத்தையும் கூறவில்லை என்பது மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அறிக்கை தவறானது மற்றும் பாதி உண்மைகளைக் கொண்டது. ஹிமந்த பிஸ்வா சர்மா இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படும் நேரத்தில் அசாம் முதல்வராக இல்லை. அப்போது அசாமில் தருண் கோகோய் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. அத்துடன் ஹிமந்தா, இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் வாக்குரிமையும் பறிக்கப்படும் என்று சொல்லவில்லை.முடிவுவைரல் புகைப் படத்தில் உள்ளவை பாதி உண்மையை கொண்டுள்ளதாகவும், திரிக்கப்பட்டுள்ளதாகவும் என்று தெரியவருகிறது. ஹிமந்த பிஸ்வா சர்மாவின் கருத்துகள் திரிக்கப்பட்டு குழப்பம் விளைவிக்கும் வகையில் பரப்பப்படுகிறது.(இந்த செய்தி aajtak என்ற இணையதளத்தின் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. அதை அப்படியே மறுபதிப்பு செய்யாமல் சரியான வகையில் மொழி பெயர்த்து தேவையான மாற்றங்கள் உடன் Tamil Samayam செய்தி ஆக்கியுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் உண்மை கண்டறியும் Shakti Collective செயல்பாட்டின் ஓர் அங்கமாகும்)

என் ஓட்டு இவங்களுக்கு தான்.. வாக்கு அளித்ததுமே ஓபனாக சொன்ன பா. ரஞ்சித்

$
0
0
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு செலுத்திய பின்னர், தான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை ஓபனா கூறியுள்ளார் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்.தமிழ் திரைப்படங்களில் முதன்முதலில் தலித் அரசியலை பேசியவர்தான் இயக்குநர் பா. ரஞ்சித். ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் அழுத்தமாக பதிவு செய்து வருபவர். இதனிடையே, நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் பா. ரஞ்சித் வாக்கு செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், "யாருக்கு வாக்கு செலுத்தினீர்கள்" என நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதிலளித்த பா. ரஞ்சித், "தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதனால் அவர்களுக்கு தான் என் வாக்கை செலுத்தி இருக்கிறேன். இது ரொம்ப முக்கியமான தேர்தல். இந்திய இறையாண்மைக்கே சவால் விடுகிற தேர்தல் இது. குறிப்பாக, இங்கே இருக்குற மதவாத சக்திகளுக்கு எதிராக, ஜனநாயகத்தை விரும்புகிற ஒவ்வொரு குடிமகனுக்கும் இது மிகவும் அவசியமான தேர்தல். மதவாத சக்தி மீண்டும் ஆட்சியில் அமருவதை தடுப்பதற்கான தேர்தலாக நான் இதை பார்க்கிறேன்" என பா. ரஞ்சித் கூறினார்.

மகளிடம் செய்தியாளர் கேட்ட கேள்வி.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ்!

$
0
0
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தலைவர் தனது குடும்பத்தினருடன் சென்று சொந்த ஊரில் வாக்களித்தார். தனது 3 பேருடன் சென்ற அன்புமணி வாக்களித்துவிட்டு வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தங்களுக்கு சாதகமான அமைதிப் புரட்சி நடைபெறுவதாக தெரிவித்தார். அன்புமணியை தொடர்ந்து அவரது மகள்கள் சங்கமித்ரா மற்றும் சஞ்சுத்ரா ஆகியோரும் செய்தியாளர்களின்கேள்விக்கு பதில் அளித்தனர். அப்போது பேசிய அன்புமணியின் மூன்றாவது மகள் சஞ்சுத்ரா, முதல் தடவையாக ஓட்டு போட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மேலும் சொந்த ஊரில் வந்து வாக்களித்ததும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறினார். அடுத்த 5 வருடங்களுக்கு நம்மை ஆளப்போகிறவர்களை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதால் யோசித்து வாக்களிக்க வேண்டும் என்றார். நல்ல கட்சிக்கு வாக்களித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் நல்ல பிரதமர் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் சஞ்சுத்ரா தெரிவித்தார். அரசியலுக்கு வருவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த சஞ்சுத்ரா, இப்போதுதான் முதல் முறையாக வாக்களித்துள்ளேன், அரசியலுக்கு வருவேனா என்பது தெரியவில்லை என்றார். மேலும் தமிழக அரசியலில் மாற்றம் வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நிச்சயம் மாற்றம் வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பு பிரச்சனைகள் உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய இரண்டாவது மகள் சங்கமித்ரா, மத்தியில் நல்ல அரசு உள்ளது, மூன்றாவது முறையாக அவர்கள் ஆட்சி அமைய வரவேண்டும் என்றார். தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் வரவேண்டும் என்றும் இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மூன்றாவது ஒரு அணி அமைந்துள்ளது. மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து மாநில அரசியலில் மாற்றம் வர வேண்டுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சட்டென குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ், இப்போது நடைபெறுவது மத்திய அரசுக்கான தேர்தல்தானே, மாநில அரசுக்கானது அல்ல என பதில் அளித்தார். அன்புமணி பேசியதை தொடர்ந்து பதில் அளித்த சங்கமித்ரா, இது சட்டமன்ற தேர்தல் அல்ல, நாடாளுமன்ற தேர்தல்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். தருமபுரியில் தொகுதியில் பாமக வேட்பாளரான சவுமியா அன்புமணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றும், மக்கள் தங்களுக்கு நல்ல ஆதரவை கொடுத்தாகவும் தெரிவித்தார். தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். சவுமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள்களும் வாக்கு சேகரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.